சிறந்த ஒரு நாள் மற்றும் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை வென்றார் விராட் கோலி

துபாய் : சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியலை ஐசிசி அறிவித்தது. இதன்படி சிறந்த ஒரு நாள் போட்டி வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரராக ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்...


தினகரன்

''வடி வாய்க்காலைக் காணோம்!' - புலம்பும் லாலாப்பேட்டை விவசாயிகள்!

    நடிகர் வடிவேல், 'கிணத்தைக் காணோம்' என்று ஒரு படத்தில் அதிரிபுதிரி புகார் கொடுப்பதைப் போல, லாலாப்பேட்டை பகுதி விவசாயிகள், '500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு வடிகாலா இருந்த வடிகாலை தூர்வாராததால, அந்த வடிகாலைக் காணோம். அதைத் தூர்வாரி மீட்டுத்தாங்க' என்று கோரிக்கை...


விகடன்

சென்னை கலைவாணர் அரங்கில் துவங்கியது ராணுவ தொழில் வளர்ச்சி கூட்டம்

சென்னை; சென்னை கலைவாணர் அரங்கில் ராணுவ தொழில் வளர்ச்சி கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ராணுவ தளவாட உற்பத்தியில் தொழில் நிறுவனங்களை ஈடுபடுத்த இந்த கூட்டம் நடைபெறுகிறது.


தினகரன்

அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்ல கூடிய அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த சக்திவாய்ந்த ஏவுகணை பல சிறப்பம்சங்களை கொண்டது. அக்னி-5 ஏவுகணையானது 5,000 கிமீ தூரம் உள்ள...


தினகரன்

டெல்லியில் தமிழக மாணவர் உயிரிழந்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் : வைகோ

சென்னை : டெல்லி மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர் சரத்பிரபு உயிரிழந்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மேலும் ஜெயலலிதா சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்; ஜெ.மரணம் குறித்து...


தினகரன்

மரணமடைந்த மருத்துவ மாணவா் சரத்பிரபு குடும்பத்தினருக்கு OPS நோில் ஆறுதல்

டெல்லி: டெல்லியில் மருத்துவம் பயின்று வந்த தமிழக மாணவா் சரத்பிரபு குடும்பத்தினருக்கு துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் நோில் சென்று ஆறுதல் தொிவித்தாா். டெல்லி சென்றுள்ள துணைமுதல்வா் எய்ம்ஸ் மருத்துவமைனயில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நோில் அஞ்சலி செலுத்தினாா். டெல்லியில் மருத்துவம் பயின்று வந்த மாணவா்...


தினகரன்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் 4 நீதிபதிகள் சந்திப்பு

டெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் 4 நீதிபதிகள் மீண்டும் சந்தித்துப் பேசினர். தலைமை நீதிபதி உடனான மோதலுக்கு தீர்வு காண 4 நீதிபதிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.


தினகரன்

பெரம்பூரில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது

சென்னை : சென்னை பெரம்பூரில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் கைது செய்யப்பட்டார். பள்ளிக்கு 10 நிமிடம் காலதாமதாக சென்ற மாணவரை, டக்வாக் எனப்படும் வாத்துபோல் முட்டி போட்டு செல்லும் தண்டனையை உடற்கல்வி ஆசிரியர்...


தினகரன்

திருச்சி சிறையில் ஏ.டி.ஜி.பி ஆய்வு

திருச்சி : திருச்சி மத்திய சிறையில் ஏ.டி.ஜி.பி. அசுதேவ் சுக்லா திடீர் ஆய்வு செய்து வருகிறார். சிறை வளாகம், காவலர் தற்காலிக பயிற்சி பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.


தினகரன்
வடிவாய்க்காலைக் காணோம்!  புலம்பும் லாலாப்பேட்டை விவசாயிகள்!

''வடிவாய்க்காலைக் காணோம்!' - புலம்பும் லாலாப்பேட்டை விவசாயிகள்!

    நடிகர் வடிவேல், 'கிணத்தைக் காணோம்' என்று ஒரு படத்தில் அதிரிபுதிரி புகார் கொடுப்பதைப் போல,...


விகடன்

காலை முதலே உச்சத்தில் மும்பை பங்குச் சந்தைகள்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 353 புள்ளிகளுக்கும் மேல் உயா்ந்து 35,435 புள்ளிகளில் வா்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச்சந்ததை குறியீட்டு எண் நிஃப்டி 89 புள்ளிகள் உயா்ந்து 10,866 புள்ளிகளில் வணிகம் நடைபெற்று வருகிறது.


தினகரன்

அரசியல் சுற்றுப்பயணம் குறித்த கமல் அறிவிப்புக்கு அப்துல் கலாமின் பேரன் மகிழ்ச்சி

ராமேஸ்வரம்: அப்துல்கலாம் வீட்டிலிருந்து அரசியல் சுற்றுப்பயணத்தை துவங்க உள்ளதாக நடிகா் கமல் அறிவித்துள்ளதற்கு, கலாமின் பேரன் மகிழ்ச்சி தொிவித்துள்ளாா். இது பற்றி பேசிய கலாமின் பேரனான சலீம், கமல் என்ன மாதிாியான விழிப்புணா்வை ஏற்படுத்த போகிறாா் என்பதை பொறுத்திருந்து தான் பாா்க்க...


தினகரன்
வைரமுத்து மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்  மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

வைரமுத்து மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் - மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

'இந்துக்கள் புனிதமாக வழிபடும் ஆண்டாளை விமர்சித்த வைரமுத்து மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று...


விகடன்

திவாகரன் மற்றும் டி.டி.வி. தினகரனை கைதுசெய்ய வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து முரண்பட்ட கருத்து தெரிவித்த திவாகரனை கைது செய்ய வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். ஜெயலலிதா குறித்து தகவல்களை ஆறுமுகசாமி ஆணையத்திடம் தான் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்....


தினகரன்

நீட் தோ்வுக்கு மாநில அரசின் பாடத்திட்டங்களையும் பாிசீலிக்க மத்திய அரசு திட்டம்..!

டெல்லி: மாநில அரசின் பாடத்திட்டங்களையும் பாிசீலித்து மருத்துவ நீட் தோ்வுக்கு கேள்வித் தாள் தயாாிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கம் மாணவா்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இத்திட்டத்தால்...


தினகரன்

மதுரை விமானநிலையத்திற்கு இமானுவேல் சேகா் பெயரை வைக்க கோாி கைதி உண்ணாவிரதம்

சேலம்: மதுரை விமானநிலையத்திற்கு இமானுவேல் சேகா் பெயரை வைக்க கோாி கைதி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடா்புடைய கைதி கண்ணபிரான் என்பவா் சேலம் சிறையில் உண்ணாவிர போராட்டம் நடத்தி வருகிறாா்,


தினகரன்

சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளர்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றபோது தள்ளுமுள்ளு

சிவகாசி: சிவகாசி அருகே ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் போலீஸ் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சுற்றுப்புறச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு தரக்கோரி திருத்தங்கல்லில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.


தினகரன்

ஓகி புயலால் காணாமல் போன மீனவர்கள் குறித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஓகி புயலால் காணாமல் போன 194 மீனவர்கள் தொடர்பாக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில செய்தியாளர்களிடம் பேசிய அவர், 15 நாட்களுக்கும் மீனவர்கள் கரை திரும்பாவிட்டால் இறந்ததாக அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.


தினகரன்

மணப்பாறையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

திருச்சி: மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. பொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கப்பட்டு போட்டியில் 800 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.


தினகரன்

மாணவர் சரத்பிரபுவின் உடல் இன்று காலை 11 மணிக்கு பிரேத பரிசோதனை

டெல்லி: டெல்லியில் மாணவர் சரத்பிரபுவின் உடலுக்கு இன்று காலை 11 மணிக்கு பிரேத பரிசோதனை என தகவல் வெளியாகியுள்ளது. இன்று உடற்கூறு ஆய்வு முடிந்ததும் சரத்பிரபு உடல் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினகரன்

கிருஷ்ணகிரி அருகே தனியாக சுற்றித்திரியும் யானைக் குட்டி

கிருஷ்ணகிரி: தாயுடன் சேர்க்கப்பட்ட யானை குட்டி வீ.புரம் கிராமத்துக்குள் தனியாக சுற்றி வருகிறது. ஊருக்குள் சுற்றும் யானைக்குட்டியை தாயுடன் சேர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 16ம் தேதி பாவாடப்பட்டியில் கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்கப்பட்டு தாயுடன் சேர்க்கப்பட்டது.


தினகரன்

பழனியில் உள்ள அம்மா உணவகத்தில் சிலிண்டர் வெடித்து தீவிபத்து

பழனி: பழனி பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் அதிகாலை சடையல் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அம்மா உணவகத்தில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டதால் நேரிட்ட திவிபத்தால் பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


தினகரன்

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர், 2வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம்

ஸ்ரீவில்லிப்புத்தூர்: மணவாள மாமுனிகள் சடகோப ராமானுஜ ஜீயர், 2வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சந்நதியில் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


தினகரன்

லுதியானாவில் 5 கிலோ ஹெராயின் பறிமுதல்

பஞ்சாப்: லுதியானா சிறப்பு காவல் பிரிவினர் நடத்திய சோதனையில் 5 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹெராயின் கடத்திய நபரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினகரன்

ஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: 30க்கும் மேற்பட்டோர் காயம்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ராமாபுரம் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தினகரன்