தேர்தல் செலவினத்திற்கான ரேட் சார்ட்... வெளியீடு; 2 இட்லி ரூ.12 ; சிக்கன் பிரியாணி ரூ. 80

தினமலர்  தினமலர்
தேர்தல் செலவினத்திற்கான ரேட் சார்ட்... வெளியீடு; 2 இட்லி ரூ.12 ; சிக்கன் பிரியாணி ரூ. 80


தமிழக லோக்சபா தேர்தலில் வேட்பாளரின் செலவு தொகை 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.ஆனால் புதுச்சேரி லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் தேர்தலில் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பு 75 லட்சம் ஆகும்.

ஆனால் தேர்தலில் செலவு செய்ய அரசியல் கட்சிகளுக்கான அதிகப்பட்ச உச்ச வரம்பு ஏதும் இல்லை.

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் ஓட்டு பதிவுக்கு முன் மூன்றுமுறை தேர்தல் கணக்கினை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் முடிந்த பின் இறுதி செலவு கணக்கை ஒப்படைக்க வேண்டும்.தேர்தல் செலவினங்கள் குறித்த கணக்கினை உரிய காலத்திற்குள் அளிக்க தவறினால் அல்லது அதற்கான காரணத்தை தெரிவிக்க தவறினால் மூன்று ஆண்டுகளுக்கு தகுதி இழப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினை கண்காணிக்கும் வகையில் விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. நகர்புறம், கிராமப்புறம் ஆகியவற்றிற்கு ஏற்பட இந்த விலை பட்டியல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி, மாகி, ஏனாமிற்கு விலைவாசி சூழலை கருத்தில் கொண்டு தனியாக ரேட் சார்ட் வெளியிடப்பட்டுள்ளது.

உணவு பொருட்கள்:

தேர்தல் துறை வெளியிட்டுள்ள பட்டியலில், டீ-12 ரூபாய், காபி-25 ரூபாய் என, விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுண்டல், பஜ்ஜி, பிரெட் பஜ்ஜி, கிரீன் சில்லி பஜ்ஜி, மெது வடை, மசால் வடை, சமோசாவிற்கு 10 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டு இட்லி 12 ரூபாய், சிக்கன் பிரியாணி 80 ரூபாய், தயிர், தக்காளி, சாம்பார் சாதம்- 25 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாப்பாடு-70 ரூபாய், விஜிடேபிள் பிரியாணி-30, கிச்சடி-25, இரண்டு சப்பாத்தி-40 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஆம்ளிபிளையர், மைக்ரோபான் கூடிய ஒலிபெருக்கி ஒரு நாளைக்கு 7,500 ரூபாய், பந்தல் அமைக்க ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய், ஆர்ச் அமைக்க சதுர அடிக்கு - 120 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் முதல் தேர்தல் முடிவு அறிவிக்கும் வரையில் வேட்பாளர் மற்றும் தேர்தல் முகவர் செய்யும் தேர்தல் செலவின கணக்கை தனியாக பராமரிக்க வேண்டும் என தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.

மறைக்கப்பட்ட அல்லது விடுப்பட்ட செலவினங்கள் ஏதேனும் இருப்பின் அதனை 24 மணி நேரத்திற்குள் தேர்தல் நடத்தும் அதிகாரி எழுத்து பூர்வமாக தெரிவிப்பார். இச்செலவினங்கள் வேட்பாளர் உள்ளடக்கிய கணக்கினை மாற்றி அமைக்க வேண்டும்.

ரொக்கமாக அல்லது வங்கி கணக்கில் இருந்து எடுத்து கொடுக்கப்படும் செலவின தொகை எந்த வகையிலும் எவருக்கு கொடுத்தாலும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் கொடுக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளரின் செலவின கணக்கு ரகசியம் கிடையாது. இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள கட்டணமான பக்கம் ஒன்றிற்கு 1 ரூபாய் செலுத்தினால், ஒப்படைக்கப்பட்ட சான்றொப்பமிடப்பட்ட கணக்கு அல்லது எந்த பகுதியின் நகலையும் யாரும் உரிமை கோரி பெறலாம் என்பது குறிப்பிடதக்கது.

தமிழக லோக்சபா தேர்தலில் வேட்பாளரின் செலவு தொகை 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.ஆனால் புதுச்சேரி லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் தேர்தலில் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பு 75

மூலக்கதை