கின்னஸ், அமெரிக்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஹார்வெடு பல்கலைக்கழகப் பாராட்டு உள்ளிட்ட 10 விருதுகளைப் பெற்ற 2 வயது மழலை குழந்தை.
கின்னஸ், அமெரிக்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஹார்வெடு பல்கலைக்கழகப் பாராட்டு உள்ளிட்ட 10 விருதுகளைப் பெற்ற 2 வயது மழலை குழந்தை.கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (25). இந்தத் தம்பதிகளின் குழந்தை சாய் சித்தார்த் (வயது 2). பிறந்த நாள் முதல் மிகவும் சுறு, சுற்றுப்பாக காணப்படும் சாய் சித்தார்த், இந்த வயதிலேயே தேசியக் கொடிகளை வைத்து அதற்குரிய நாடுகளின் பெயரைச் சரியாக தெரிவிக்கின்றார்.
இந்திய வரைபடத்தை வைத்து அனைத்து மாநிலங்களையும் சரியாக அடையாளம் காட்டுகின்றார். உலக வரைபடத்தில் கண்டங்கள் பெயரைச் சரியாகக் காண்பித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.
21.52 வினாடிகளில் 28 இந்திய மாநிலங்களையும், உலகில் உள்ள அனைத்துக் கண்டங்களையும் 11 வினாடிகளில் கண்டறிந்து, உலகின் ஏழு அதிசயங்களை 8.95 வினாடிகளில் கண்டறிந்து, 195 கொடிகளை மிகக் குறுகிய நொடிகளில் சொல்லி 10 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.
“வோர்ல்ட்ஸ் யங் ப்ரில்லியன்ட்“
இது குறித்து பேசிய சாய் சித்தார் குடும்பத்தார் கூறியதாவது. சிவில் சர்வீஸ் தேர்வு தயாராகப் பல்வேறு புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்திருக்கின்றோம். உலகம் இந்திய வரைபடங்களை வீட்டில் வாங்கி வைத்திருந்து போது, அதனைப் பார்த்தார் குழந்தை சாய் சித்தார்த். இந்த நிலையில் ஒவ்வொரு கண்டங்கள் பெயர்கள் மற்றும் இந்திய வரைபடத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் பெயர்களை அவனுக்குச் சொல்லிக்கொடுத்தோம். இதை அவன் புரிந்து கொண்டான். 21.7 வினாடிகளில் இந்திய வரைபடத்தை வைத்து மாநிலங்களின் பெயரையும் - அதனைத் தொடர்ந்து உலக வரைபடத்தில் உள்ள கண்டங்களின் பெயரை 11.42 வினாடிகளில் கண்டறிந்து சாதனை படைத்தான்.
இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது. சாய் சித்தார்தின் திறமையைப் பாராட்டி அமெரிக்கன் உலக சாதனைப் புத்தகம் அவருக்கு “வோர்ல்ட்ஸ் யங் ப்ரில்லியன்ட்“ என்ற பட்டத்தை அளித்து கௌரவ படுத்தியெடுத்து .லண்டன் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், குழந்தையை பாராட்டி பதக்கம், சான்றிதழ் தந்து கெளரவ படுத்தியது. தேசியக் கொடியை வைத்து ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளை அடையாளம் கண்டதற்காக ஆஸ்கார் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பிடித்தார்.
மழலை குழந்தை சாய் சித்தார்த்தின் இந்தச் சாதனைகள் நோபல் வேர்ல்ட் ரெகார்ட், இன்டர்ஷேனல் புக் ஆப் ரெக்கார்டு, வேர்ல்டு வைடு புக் ஆப் ரெக்கார்டு, கலாம் வேர்ல்டு ரெக்கார்டு உள்ளிட்ட புத்தகங்களிலும் இடம்பிடித்து உள்ளது.வீட்டில் டி.வி.பயன்பாட்டை குறைத்துவிட்டோம். குழந்தைக்கு விளையாட, வீடியோ பார்க்க மொபைல் தருவதில்லை. அறிவுசார் விடயங்களை, செயல் முறை விளக்கங்களுக்கே முன்னுரிமை தருகின்றோம்.
நவீனமேயான உலகில் குழந்தைகளிடம் மொபைல் ஃபோன் உள்ளிட்டவற்றைத் தராமல், அவர்களின் எதிர்காலம் நல்ல வகையில் அமைய, குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், பெற்றோர் உரிய பழக்கங்களை கற்று தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
