செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், சங்க இலக்கியங்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள், பதிப்புகள், மொழிபெயர்ப்புகள் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.

 

அதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், சங்க இலக்கியம் குறித்த தகவல் களை அறியும் வகையில், நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட எட்டுத்தொகை, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை.

 

குறிஞ்சிப்பாட்டு உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்கள்; திருக்குறள், பழமொழி, நாலடியார் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த தகவல்களை உரைகளாகப் பதியும் பணி நடைபெற்று வருகிறது.

 

தற்போது திருக்குறள், குறுந்தொகை, மலைபடுகடாம், இரட்டை காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை ஆகியவை குறித்த அரிய செய்திகள் உரைகளாகப் பதியப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

 

இவற்றைப் பிரபலப் பேராசிரியர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கி உள்ளனர். இதுகுறித்த காணொளிகளைச் செம்மொழி நிறுவனத்தின், www.cict.in என்ற இணையதளத்தில் உள்ள காணொலி பகுதியில் பார்க்கலாம்.

மூலக்கதை