ஞானாம்பிகை காளாத்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தினமலர்  தினமலர்
ஞானாம்பிகை காளாத்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் ஞானம்பிகை காளாத்தீஸ்வரர் கோயில் மகாகும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பத்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

உத்தமபாளையம் ஞானாம்பிகை காளாத்தீஸ்வரர் கோயில் ராகு, கேது, கால சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. 2004 ல் இந்த கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் 19 ஆண்டுகளாக திருப்பணி, கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

இங்குள்ள ராகு கேது தனி சன்னதியில் வாரந்தோறும் ஞாயிறு மாலை ராகு காலத்தில் நடைபெறும் பரிகார பூஜைகளில் திரளாக பக்தர்கள் பங்கேற்கின்றனர். 19 ஆண்டுகளுக்கு பின் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் முயற்சி செய்து கும்பாபிஷேகம் நடத்த அனுமதி பெற்று தந்தார்.

கோயில் திருப்பணிகளில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் பெரும்பாலான பணிகளையும், கும்பாபிஷேக செலவுகளையும் ஏற்றார். கம்பம் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பாஸ்கர், காம்பவுண்ட் சுவர், கொடிமரம், வர்ணம் தீட்டுதல் போன்ற பணிகளை மேற்கொண்டார்.

கடந்த 15 ல் யாகசாலை பூஜைகள் துவங்கியது. சிவன், அம்மன், முருகப் பெருமான் ஆகிய தெய்வங்களுக்கு தலா 5 யாக குண்டங்களும், பரிகார தேவதைகள் 27 பேர்களுக்கு யாக குண்டங்களும் அமைக்கப்பட்டு வேள்விகள் நடந்தது . 120 கும்பங்களில் புனித நீர் வைத்து யாகசாலையில் பூஜை செய்தனர்.

நேற்று காலை திருப்பரங்குன்றம் சுப்ரமணியர் கோயில் தலைமை பட்டர் ராஜா தலைமையில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர் கலசங்களின் மீது புனித நீர்ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், எம்.பி. ரவீந்திரநாத், வி.பி.ஜெயபிரதீப், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன், செயல் அலுவலர் இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கட்டுக்கடங்காத கூட்டம் : நேற்று காலை 7 மணி முதல் பக்தர்கள் கோயிலிற்கு வர துவங்கினர். நேரம் ஆக ஆக கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

காலை 9:20 மணிக்கு கோயில் கதவுகள் அடைக்கப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்த பின்பே கதவுகள் திறக்கப்பட்டது.

எம்.பி. ரவீந்திரநாத், ஜெயபிரதீப் பக்தர்களுக்கு 10 ஆயிரம் லட்டுகளை வழங்கினர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைய துறை, பசும்பொன் இளைஞர் அணியினர், ஒம் நமோ நாராயணா பக்த சபையினர் செய்திருந்தனர்.

இதுவரை உற்சவர் இல்லாமல் இருந்த ராகு, கேது சன்னதிக்கு இனி தம்பதி சகித பஞ்சலோக உற்சவர்களை கம்பம் கே.ஆர். ஜெயபாண்டி - கலைவாணி குடும்பத்தினர் வழங்கினர்.

உத்தமபாளையம்: உத்தமபாளையம் ஞானம்பிகை காளாத்தீஸ்வரர் கோயில் மகாகும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பத்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.உத்தமபாளையம் ஞானாம்பிகை

மூலக்கதை