சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கேரள மாநிலத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அங்குக் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வெப்ப நிலை இந்த ஆண்டு 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அதைவிட அதிகம்.

பள்ளி நேரங்களில் குழந்தைகள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அங்கு "வாட்டர் பெல்" என்ற முறை கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் அமலானது.

இந்த புதிய முறையின்படி மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், தினமும் காலை 10.30 மணி மற்றும் மதியம் 2.30 மணி ஆகிய 2 முறை குழந்தைகள் தண்ணீர் குடிப்பதற்காக மணி அடிக்கப்படும். குழந்தைகள் தண்ணீர் குடிக்க 5 நிமிடம் இடைவேளை வழங்கப்படும்.

அந்த நேரத்தில் குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிக்கவேண்டும். குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வாட்டர் பெல் முறையின் மூலம், வெயிலின் தாக்கத்திலிருந்து குழந்தைகள் காத்துக் கொள்ள முடியும்.

மூலக்கதை