தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

காரைக்குடி அருகே கல்லல் அரண்மனை சிறுவயலில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் காளிராசா, கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 148 ஆண்டுகள் பழமையான தாது பஞ்சகால ஜமீன்தார் கல்வெட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.

 

இதுகுறித்து காளிராசா கூறுகையில், ‘‘கல்லல் அருகே உள்ள அரண்மனை சிறுவயல் பகுதியில் உள்ள சீனக்கண்மாய் கலுங்கு மடையில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

 

கரையை ஒட்டியுள்ள கட்டுமான பகுதியில் சுமார் 2.5 அடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் உடையதாகக் கல்வெட்டு உள்ளது. இதில் 1876ம் வருடம் மே 8ம் தேதி தாது வருசம் சித்திரை 28ம் தேதி சிவ சப் கட்டணூர் ஜமீன்தார் முத்து வடுகு முத்துராமலிங்க தேவர்கள் என்று எழுதப்பட்டுள்ளது.

 

இதில் சிவ சப் என்பது சிவகங்கை சார்பு எனப் பொருள் படுவதாகக் கொள்ளலாம். கண்மாயை முத்துவடுகு என்ற முத்துராமலிங்க ஜமீன்தார் கண்மாய் மற்றும் கலுங்கை சீர் செய்தது தெரிகிறது, என்றார்.

மூலக்கதை