கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், மேற்கு வங்கத்துக்குச் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்துக் காணப்படுவதால், அத்தியாவசியத் தேவையின்றிப் பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் வருவதைத் தவிா்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் புதன்கிழமை வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகப் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துக் காணப்படும் நிலையில், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களான வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூா், கோயம்புத்தூா், ஈரோடு, கரூா், திருச்சிராப்பள்ளி, அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் புதன்கிழமை, வியாழக்கிழமை (ஏப்.24,25) ஓரிரு இடங்களில் மிகக் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும்.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீா் அருந்துமாறும், அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிா்த்திடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதேபோன்று புதன் மற்றும் வியாழக்கிழமை மிகக் கடுமையான வெப்பாலை வீசக்கூடும் என்பதால் மேற்குவங்கத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
