மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

மொழிபெயர்ப்பிற்கான சாகித்திய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

தமிழ் உள்பட 24 மொழிகளைச் சேர்ந்த படைப்பாளர்களுக்குச் சாகித்திய அகாடமி விருதுகள் மார்ச். 11-ல் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மமாங் தய் எழுதிய தி பிளாக் ஹில் என்ற புத்தகத்தைத் தமிழில் கருங்குன்றம் என்ற பெயரில் புத்தகமாக மொழிபெயர்த்ததற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மொத்தம் 24 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்த 24 மொழிபெயர்ப்பாளர்களுக்கு சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சாகித்திய அகாடமி விருது வென்றவர்களுக்கு ரூ. 50,000 ரொக்கப்பணம் விருது வழங்கும் விழாவில் வழங்கப்படவுள்ளது.

மூலக்கதை