சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம்.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம்

 

சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம் செய்துள்ளனர். தொல்லியல் துறையில் டிப்ளமோ பயின்று தமிழ், ஆங்கில மொழிகள் தெரிந்த 4 சுற்றுலா கைடுகள், பார்வையாளர்களுக்கு உதவ உள்ளனர்.

 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழ் வாராய்ச்சி பணிகள் நடந்தன. கீழடியில் தமிழக அரசின் சார்பில் ரூ.18 கோடியே 40 லட்சத்தில் செட்டிநாட்டுக் கட்டிடக்கலை பாணியில் அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது.

 

இந்த அருங்காட்சியத்தில் தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதியிலிருந்து இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் என ஏராளமானோர் குவிந்தவண்ணம் உள்ளனர்.

 

கீழடியில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் மாணவர்கள் தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழர்களின் பண்டைய கால நாகரீகம் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

 

சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ உள்ளனர்

 

 

இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால மண்பானை, ஓடுகள், தமிழ்ப் பிராமி எழுத்துக்கள், கருப்பு, சிவப்பு பானைகள், பண்டைய கால ஆயுத ங்கள். ஆபரணங்கள் என தமிழர்களின் வரலாற்றை அறியக் கூடிய ஆயிரக் கணக்கான பொருட்களைச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கீழடி அருங்காட்சியத்தை பார்வையிட்டு அதிலிருந்து கருத்துக்களைப் புரிந்துகொள்ளச் சிரமமாக உள்ளது என்று அதனால் எங்களுக்குச் சுற்றுலா கைடுகள் நியமனம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகளை நியமனம் செய்துள்ளனர். இவர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ உள்ளனர்.

மூலக்கதை