தென்னாப்பிரிக்காவுக்கு சட்டவிரோதமாக 150 பாலஸ்தீனியர்கள் நாடுகடத்தல்

  தினத்தந்தி
தென்னாப்பிரிக்காவுக்கு சட்டவிரோதமாக 150 பாலஸ்தீனியர்கள் நாடுகடத்தல்

ஜோகன்னஸ்பெர்க் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் மூண்டது. இதில் காசாவை சேர்ந்த 65 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையீட்டின்பேரில் இருதரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் காசாவை சர்வதேச நகரமாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காசாவில் இருந்து 153 பாலஸ்தீனியர்களை அங்கிருந்து வெளியேற்றி சட்டவிரோதமாக தங்கள் நாட்டில் விட்டதாக தென்னாப்பிரிக்கா வெளியுறவு மந்திரி ரோனால்ட் லமோலா தெரிவித்தார். தனி விமானம் மூலமாக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஜோகன்னஸ்பெர்க்கில் இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் தங்களுடைய விருப்பத்தின் பெயரிலேயே காசாவில் இருந்து வெளியேறியதாக கூறினாலும் இது திட்டமிட்ட சதி என தென்னாப்பிரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

மூலக்கதை