’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்

சமூக வலைத்தளங்களில் பயனர்கள் இடையே அதிக ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எனப்படும் ஷார்ட் வீடியோக்கள் இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் ஈர்ப்பதாக உள்ளது. இதனால், எந்நேரமும் ரீல்ஸ்களில்யே இளைஞர்கள் மூழ்கி கிடப்பதை பார்க்க முடிகிறது. விதவிதமான வீடியோக்கள் போட்டு அதிக லைக்ஸ் கமெண்டுகளையும் பெற ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். பயனர்களை கவர அவ்வப்போது புதிய புதிய அப்டேட்களை இன்ஸ்டாகிராம் வழங்கி வருகிறது. இந்த நிலையில், புதிய அப்டேட் ஒன்றை இன்ஸ்டாகிரம் கொண்டு வர உள்ளது. இதன்படி, இன்ஸ்டாகிரம் செயலியை ஒபன் செய்த உடன் இனி நேராக ரீல்ஸ் பக்கத்திற்கு சென்று விடும். தற்போது வரை இன்ஸ்டகிராம் செயலியை திறந்ததும் பயனர்களின் ஸ்டோரீஸ்களை காட்டும் வகையில் உள்ளது. ரீல்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்தால்தான் ரீல்ஸ் வரிசையாக காட்டும் நிலையில் இனி ஒபன் செய்த உடன் ரீல்ஸ் பக்கமே தோன்றும் வகையில் இந்த வசதி வர உள்ளது. இந்தியா மற்றும் தென்கொரியாவில் சோதனை அடிப்படையில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூலக்கதை
