அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி

  தினத்தந்தி
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி

சென்னை , இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி அதிகாரபூர்வமாக டிரோன் பைலட் உரிமம் பெற்றுள்ளார். டிரோன் பைலட் உரிமத்தை அதிகாரபூர்வமாக பெற்றதாக சமூகவலைதள பக்கத்தில் தோனி அறிவித்தார். சென்னையிலுள்ள, கருடா ஏரோஸ்பேஸ் என்ற சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (DGCA) அங்கீகரிக்கப்பட்ட ரிமோட் பைலட் பயிற்சி நிறுவனத்தில் தோனி பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.அவர் இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடரும் ஆவார். இந்தியாவின் முன்னணி டிரோன் உற்பத்தியாளர்களில் ஒன்றான கருடா ஏரோஸ்பேஸ், அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களின் மேற்பார்வையின் கீழ் 2,500க்கும் மேற்பட்ட விமானிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. அதில் பங்கேற்று முறையான பயிற்சி பெற்ற தோனி டிரோன் பைலட் உரிமத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளார்.

மூலக்கதை