ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

  தினத்தந்தி
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

மெல்போர்ன், இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் அடுத்த மாதம் 21-ந் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இதனால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதலாவது போட்டியில் இருந்து விலகி உள்ளார். 2-வது போட்டிக்கு முன்னர் அவர் உடற்தகுதியை எட்டி விடுவார் என கூறப்படுகிறது.இந்நிலையில் ஆஷஸ் தொடரில் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்கு 40 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை