நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
பெங்களூரு, கன்னடம், தெலுங்கு சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் 41 வயதான நடிகை பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘நவீன்ஸ்' என்ற முகநூல் கணக்கில் இருந்து நண்பராக ஏற்றுக்கொள்ள கோரிக்கை வந்துள்ளது. அதனை ஏற்காததால், நடிகைக்கு மெசஞ்சர் மூலம் அந்த நபர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அப்போது அவர் ஆபாச தகவலுடன், ஆபாச படம், வீடியோக்களையும் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நடிகை அந்த நபரை கண்டித்துள்ளார். இதனை கண்டுக்கொள்ளாத அந்த நபர் தனது நிர்வாண படங்களையும், ஆபாச வீடியோக்களையும் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். இதையடுத்து நடிகை அந்த நபரின் முகநூல் கணக்கை பிளாக் செய்துள்ளார். அதன்பிறகு அந்த நபர் மற்றொரு கணக்கில் இருந்து தொடர்ந்து ஆபாசமாகவும், படம், வீடியோக்களையும் அனுப்பி 3 மாதங்களாக நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உலைச்சலுக்கு உள்ளான நடிகை கடந்த 1-ந் தேதி அந்த நபரை நகரபாவியில் உள்ள நந்தன் அரண்மனை அருகே நேரில் அழைத்து கண்டித்துள்ளார். இதனையும் பொருட்படுத்தாத அந்த நபர் தொடர்ந்து முகநூலில் குறுஞ்செய்தி அனுப்பி நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதில் கோபமடைந்த நடிகை, அன்னபூர்ணேஷ்வரி நகர் போலீசில் இந்த பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டி.வி. நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, பெங்களூருவை சேர்ந்த நவீன் (வயது 41) என்பதும், இவர் பிரபல தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து நவீனை போலீசுார் கைது செய்தனர். அவர் மீது பி.என்.எஸ். சட்டப்பிரிவு 75 (1) (3) (பாலியல் துன்புறுத்தல்), 78 (1) (3) (பின்தொடர்தல்) மற்றும் 79 (ஒரு பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை அல்லது செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
