ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
சென்னை, தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் சுமார் 1 கோடி பேர் வசித்து வருகின்றனர். இது தமிழக மொத்த மக்கள்தொகையில் 8-ல் ஒரு பங்கு ஆகும். சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் தான். வேலைக்காகவே இங்குவந்து தங்கியுள்ளனர். இவர்கள் பண்டிகை மற்றும் முக்கிய நாட்களில் சொந்த ஊர் செல்வது வழக்கம். அந்த வகையில், நாளை (புதன்கிழமை) ஆயுதபூஜை கொண்டாடப்பட இருக்கிறது. அடுத்த நாள் காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமி என்பதால் தொடர்ந்து 2 நாள் விடுமுறை வருகிறது. மேலும், தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை வேறு விடப்பட்டுள்ளதால், பலர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு வசதியாக, கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பஸ்களும், சென்டிரல், எழும்பூரில் இருந்து சிறப்பு ரெயில்களும் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இன்று வரை சிறப்பு பஸ்கள் மூலம் 1 லட்சம் பேர், சிறப்பு ரெயில்கள் மூலம் 3 லட்சம் பேர் என மொத்தம் 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஆயுதபூஜையை முடித்துக்கொண்டு சென்னை திரும்புவதற்காகவும் சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
