ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்: சுந்தர் பிச்சை

  தினத்தந்தி
ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்: சுந்தர் பிச்சை

பிரபல வலைத்தள தேடுபொறி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை உள்ளார். இவர் அளித்த பேட்டியில், ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளார். அவர், “ஏ.ஐ. என்னும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் தாக்கம் அபாரமாக உள்ளது. இருப்பினும் அதில் தவறுகளுக்கு இடம் உண்டு. ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது. வணிகம் மற்றும் பொருளாதார ரீதியாக அவை தரும் தகவல்களில் பிரச்சினை இருக்கலாம். எனவே ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்” என்றார்.

மூலக்கதை