வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம்
டுவிட்டரை எலான் மஸ்க் கடந்த 2022-ஆம் ஆண்டு 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து அந்த செயலியில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். புளூ டிக் வசதியைப் பணம் கொடுத்து யார் வேண்டுமானாலும் பெறலாம் என்று தொடக்கத்திலேயே மாற்றம் கொண்டு வந்தார். அதுபோக, பயனர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய அப்டேட்கள் அறிமுகமாகி வருகின்றன. எக்ஸ் தளத்தில் அறிமுகமாகியுள்ள குரோக் ஏஐ (AI) தற்போது பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், வாட்ஸ்-அப்பிற்கு போட்டி கொடுக்கும் வகையில் சாட்டிங் வசதியும் எக்ஸ் தளத்தில் அறிமுகமாகியுள்ளது. ஆடியோ, வீடியோ கால் வசதிகளுடன் இந்த சாட்டிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில், எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் மற்றும் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாத வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இந்த புதிய சாட்டிங் வசதி அறிமுகமாகியுள்ளது. தற்போது ஆப்பிள் ஐஓஎஸ் (iOS) சாதனங்களில் மட்டும் இந்த வசதி கிடைக்கிறது. விரைவில் ஆண்ட்ராய்டு போன்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
