இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக மீண்டும் தெரிவித்த டிரம்ப்

  தினத்தந்தி
இந்தியாபாகிஸ்தான் போரை நிறுத்தியதாக மீண்டும் தெரிவித்த டிரம்ப்

வாஷிங்டன்,அமெரிக்க அதிபர் டிரம்ப் மியாமியில் நடைபெற்ற அமெரிக்க வணிக மன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: “இந்தியா–பாகிஸ்தான் போர் உள்ளிட்ட 8 போர்களை 8 மாதங்களில் நிறுத்தினேன். நான் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தின் நடுவில் இருந்தேன். அப்போது அவர்களுக்குள் சண்டை வெடித்தது. 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவர்களிடம், ‘சமாதானத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், உங்களுடன் எந்த வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்யப் போவதில்லை’ என்று தெரிவித்தேன். அதன் பிறகு, ஒரு நாள் கழித்து, ‘நாங்கள் சமாதானம் செய்து கொண்டோம்’ என்று எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர்கள் போரை நிறுத்தினர்,” என டிரம்ப் தெரிவித்தார். இந்தியா–பாகிஸ்தான் போரை டிரம்ப் நிறுத்தவில்லை என்றும், பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம் என இந்தியா தெரிவித்தது. இருந்தாலும், டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து கூறி வருகிறார்.

மூலக்கதை