இரவுப்பணி சுமை என கருதி... நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்; ஜெர்மனியில் கொடூரம்
பெர்லின், ஜெர்மனியில் ஊர்செலன் நகரில் உள்ள மருத்துவமனையில் ஆண் நர்சாக 2020-ம் ஆண்டு பணியில் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய பணி காலத்தில், நோயாளிகளை பராமரிப்பதற்கு பதிலாக அவர்களை ஊசி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் 2023-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2024-ம் ஆண்டு மே வரையில் நடந்துள்ளது. அப்போது, இதுபோன்று 10 நோயாளிகளை கொலை செய்துள்ளார். 27 பேரை கொல்ல முயற்சியும் செய்துள்ளார். இரவு நேர பணியின்போது, பணி சுமை கூடுதலாக இருக்கிறது என உணர்ந்த அவர், இந்த முடிவை எடுத்துள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஆச்சன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதில், 15 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளியே வர முடியாதபடிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அவர் மேல்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், உயிரிழந்தவர்களின் உடல்களை வெளியே எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், மீண்டும் அவருக்கு எதிராக விசாரணை நடக்கும் என தெரிகிறது. 2019-ம் ஆண்டில் நீல்ஸ் ஹோஜெல் என்ற முன்னாள் ஆண் நர்ஸ் ஒருவர் வடக்கு ஜெர்மனியில் 2 மருத்துவமனைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார். 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையில் நோயாளிகளுக்கு அதிக டோஸ் மருந்துகளை கொடுத்ததில் பலர் உயிரிழந்தனர். ஜெர்மனியின் நவீன வரலாற்றில் கொடூர கொலைக்காரர் இவர் என நம்பப்படுகிறது. இந்த நிலையில், 20 ஆண்டுகள் கழித்து மற்றொரு கொடூர வழக்கு தெரிய வந்துள்ளது.




நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
