போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 2 பேர் பலி
வாஷிங்டன், வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்தவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடல் வழியாக படகில் போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பசுபிக் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது. பசுபிக் கடல் வழியாக சர்வதேச கடல்பரப்பில் வந்துகொண்டிருந்த படகு மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் படகில் போதைப்பொருள் கடத்தி வந்த 2 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் போதைப்பொருள் கடத்தி வந்ததாக படகுகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.




நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
