அமெரிக்காவில் சரக்கு விமானம் விழுந்து தீப்பிடித்து 7 பேர் பலி

  தினத்தந்தி
அமெரிக்காவில் சரக்கு விமானம் விழுந்து தீப்பிடித்து 7 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் கென்டகி மாகாணம் லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் மோதி விபத்திற்குள்ளானது. தரையில் மோதிய வேகத்தில் சறுக்கியபடி சென்று வெடித்து தீப்பிடித்தது. மேலும் அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் தீ பரவியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 3 பேர் உள்பட 7 பேர் பலியானார்கள். 11 பேர் காயம் அடைந்தனர். விமானத்தில் தொடர்ந்து 12 மணி நேரம் பறப்பதற்கான எரிபொருள் இருந்தது என்றும், விபத்து நடந்த இடத்தில் எரிபொருள் சுத்திகரிக்கும் நிலையம் இருந்தது என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சரக்கு விமானம் புறப்பட்டபோது ஒரு இறக்கையில் தீப்பிடித்து, தரையில் மோதியது. மோதியவுடன் பலத்த சத்தத்துடன் தீப்பிழம்பாக வெடித்து சிதறியது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. விமானம் தரையில் மோதி தீப்பிடித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

மூலக்கதை