அபுதாபி லாட்டரி குலுக்கல்: சென்னை என்ஜினீயருக்கு ரூ.60¼ கோடி பரிசு
அபுதாபி, அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் லாட்டரி குலுக்கல் ஒவ்வொரு மாதமும் நடந்து வருகிறது. இந்த லாட்டரி டிக்கெட் ஒன்றின் விலை 500 திர்ஹாம் ஆகும். இதனை பொதுமக்கள் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள கடைகளிலும், இணையதளம் மூலமும் வாங்கிக் கொள்ளலாம். அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படுவதால் அமீரகத்தில் வசிப்பவர்கள் மட்டுமல்லாது வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிப்பவர்களும் இதனை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அபுதாபியில் நடந்த லாட்டரி குலுக்கலில் அமீரகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் சென்னையைச் சேர்ந்த சரவணன் வெங்கடாசலம் (வயது 44) என்பவர் 2½ கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.60.37 கோடி) அதிர்ஷ்ட பரிசை பெற தேர்வு செய்யப்பட்டார். இது 280-வது லாட்டரி குலுக்கல் ஆகும். இது குறித்து சரவணன் வெங்கடாசலம் கூறியதாவது:- இந்த அதிர்ஷ்ட பரிசு கிடைத்ததை என்னால் நம்ப முடியவில்லை. எனது பெயரில் பலர் இருக்கலாம் என நினைத்தேன். எனக்கு பரிசு கிடைத்ததை உறுதி செய்த பின்னரே லாட்டரி நிறுவனத்துடன் பேசினேன். இந்த பரிசை கொண்டு எனது 2 குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவேன். கடந்த 2019-ம் ஆண்டு அமீரகத்துக்கு வந்தேன். அதற்கு முன்னர் கத்தார், குவைத் மற்றும் ஓமன் நாடுகளில் பணிபுரிந்தேன். கடந்த மாதம் 30-ந் தேதி ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்ற சிறப்பு திட்டத்தின் மூலம் எனது அதிர்ஷ்ட எண்ணான 463221-ஐ வாங்கினேன். இது எனது வாழ்க்கையில் கிடைத்த முதல் அதிர்ஷ்ட பரிசு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.




நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
