நைஜீரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், படுகொலை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியானது. இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நைஜீரிய அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:- நைஜீரிய அரசாங்கம் கிறிஸ்தவர்களைக் கொல்வதைத் தொடர்ந்து அனுமதித்தால், அமெரிக்கா உடனடியாக நைஜீரியாவுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்தும். மேலும் இந்த கொடூரமான அட்டூழியங்களைச் செய்யபவர்களை, முற்றிலுமாக அழிக்க அந்த நாட்டிற்குள் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாத்தியமான நடவடிக்கைக்குத் தயாராகுமாறு நமது போர்த் துறைக்கு நான் இதன் மூலம் அறிவுறுத்துகிறேன் என்றார். சமீபத்தில் நைஜீரியாவை கவலைக்குரிய நாடு பட்டியலில் சேர்த்து டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். போகோ ஹார்ம் (Boko Haram) போன்ற பயங்கரவாத குழுக்கள் பல ஆண்டுகளாக அந்நாட்டில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அவர்களால் அனைத்து மதத்தினருக்கும் பாதிப்புதான் என நைஜீரியா கூறுகிறது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
