ஜோகூர்: போலி மருத்துவச் சான்றிதழ் கும்பலைச் சேர்ந்த அறுவர் கைது
பெட்டாலிங் ஜெயா: போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனைக் கும்பலைச் சேர்ந்த அறுவரை மலேசியாவின் ஜோகூர் மாநிலக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.வடக்கு ஜோகூர் பாருவில் போலி மருத்துவச் சான்றிதழ்கள் விற்கப்படுவதாக அக்டோபர் 17ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது என்று அம்மாவட்டக் காவல்துறைத் தலைவர் எம்.எஸ். பல்வீர் சிங் தெரிவித்தார்.அதற்கு நான்கு நாள்களுக்குப் பிறகு, இஸ்கந்தர் புத்ரி, பிலெந்தோங், ஸ்கூடாய் பகுதிகளில், 26 மற்றும் 27 வயதுடைய மூன்று ஆடவரைக் காவல்துறை கைதுசெய்தது. அதன்பின்னர் இம்மாதம் 23ஆம் தேதி ஸ்கூடாய், மசாய், பாசிர் கூடாங் பகுதிகளிலிருந்து, 24 முதல் 31 வயதிற்குட்பட்ட ஓர் ஆடவரும் இரு பெண்களும் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 1,363 போலி மருத்துவச் சான்றிதழ்கள், ஏழு பற்றட்டைகள், ஏழு கைப்பேசிகள், ஒரு மோட்டார்சைக்கிள், 40,000 ரிங்கிட் ரொக்கம் ஆகியவற்றைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாகத் திரு பல்வீர் சிங் தெரிவித்தார். அவர்களில் இருவர்மீது கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 24) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார். மற்ற நால்வரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
