‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தை கைப்பற்ற துடிக்கும் டாடா

தினமலர்  தினமலர்
‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தை கைப்பற்ற துடிக்கும் டாடா

மும்பை : நிதி நெருக்­க­டி­யில் சிக்­கி­யுள்ள, நரேஷ் கோய­லின், ‘ஜெட் ஏர்­வேஸ்’ நிறு­வ­னத்தை வாங்க, டாடா குழு­மம் தீவிர முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளது.

இது தொடர்­பாக ஏற்­க­னவே, இரு தரப்­பி­லும் பேச்சு நடை­பெற்­றது. அதில், ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னத்­தின், 26 சத­வீத பங்கை வாங்கி, நிர்­வா­கத்தை கைப்­பற்ற விரும்­பு­வ­தாக டாடா தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது. அதற்கு நரேஷ் கோயல் ஒப்­புக் கொள்­ள­வில்லை. இவர், தன் மனை­வி­யு­டன் இணைந்து, ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னத்­தில், 51 சத­வீத பங்கை வைத்­து உள்­ளார். எதி­யாட் ஏர்­வேஸ் நிறு­வ­னம், 24 சத­வீத பங்கை வைத்­துள்­ளது.

இந்­நி­லை­யில், மீண்­டும் ஜெட் – டாடா தரப்­பி­னர் இடையே பேச்சு நடை­பெற உள்­ள­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. டாடா குழு­மம், தற்­போது ஏர் ஏஷியா இந்­தியா மற்­றும் விஸ்­டாரா நிறு­வ­னங்­கள் மூலம் விமான சேவையை மேற்­கொண்டு வரு­கிறது. நிதி நெருக்­க­டி­யில் உள்ள ஏர் இந்­தியா நிறு­வ­னத்­தை­யும், டாடா குழு­மம் வாங்க முயன்­றது. ஆனால், மத்­திய அரசு பின்­வாங்­கி­ய­தால், அத்­திட்­டம் நிறை­வே­ற­வில்லை.

தற்­போது, ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னத்தை வளைத்­துப் போடும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளது. டாடா சன்ஸ் முன்­னாள் தலை­வர் ரத்­தன் டாடா, 90களின் இறு­தி­யில், சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் மூலம், விமான சேவை­யில் கால் பதிக்க முனைந்­த­போது, நரேஷ் கோயல் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை