பரிதாபம் குடிநீர் தேடி அலையும் விலங்குகள் தொட்டி, குட்டைகளில் தண்ணீர் இல்லை

தினமலர்  தினமலர்
பரிதாபம் குடிநீர் தேடி அலையும் விலங்குகள் தொட்டி, குட்டைகளில் தண்ணீர் இல்லை

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நீர்நிலைகள் வறண்டதால் குடிநீர் கிடைக்காமல் வனவிலங்குகள் அலைகின்றன. இத்தாலுகாவில் பிரான்மலை சுற்றுவட்டாரத்தில் ஏராளமான குரங்குகள் திரிகின்றன. சதுர்வேதமங்கலம், முறையூர், ஏரியூர் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. தற்போது கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு விலங்குகள், கால்நடைகளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

குரங்குகள் மலைப்பகுதியை விட்டு கீழே இறங்கி வந்து வீடுகளுக்குள் தண்ணீர் தேடி அலைகின்றன. அதேபோல் மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவதும் தொடர்கிறது. காட்டு மாடுகள், கோயில் மாடுகள் தண்ணீர் தேடி வரும்போது விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன. ஊராட்சி நிர்வாகம், வனத்துறை சார்பில் ஆங்காங்கே கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தும் பலவற்றில் தண்ணீர் இல்லை. வரும் நாட்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து குரங்குகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகளும் கால்நடைகளும் குடிநீர் கிடைக்காமல் பெரிய அபாயத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே அந்தந்த பகுதி ஊராட்சி நிர்வாகங்கள், வனத்துறையினர் சிறிய தொட்டிகள், குட்டைகளில் தண்ணீரை நிரப்பி விலங்குகளின் தாகத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நீர்நிலைகள் வறண்டதால் குடிநீர் கிடைக்காமல் வனவிலங்குகள் அலைகின்றன. இத்தாலுகாவில் பிரான்மலை சுற்றுவட்டாரத்தில் ஏராளமான குரங்குகள் திரிகின்றன.

மூலக்கதை