''தேர்தல் முடிஞ்சதும் வாங்க..'': பிரதமர் மோடியை பரஸ்பரம் அழைக்கும் ரஷ்யா - உக்ரைன் அதிபர்கள்

தினமலர்  தினமலர்
தேர்தல் முடிஞ்சதும் வாங்க..: பிரதமர் மோடியை பரஸ்பரம் அழைக்கும் ரஷ்யா  உக்ரைன் அதிபர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: லோக்சபா தேர்தலுக்குப் பிறகு தங்கள் நாடுகளுக்குச் வருமாறு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகிய இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்தியாவை சமாதானம் செய்யும் நாடாக தாங்கள் பார்க்கிறோம் என்று இரு நாட்டு தலைவர்களும் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன. ரஷ்ய அதிபர் புடினை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீண்டும் அதிபர் ஆகியுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். லோக்சபா தேர்தலுக்குப் பிறகு தங்கள் நாடுகளுக்குச் வருமாறு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகிய இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர். பிரதமர் மோடி கடைசியாக 2018ம் ஆண்டு ரஷ்யா சென்றார்.

இறையாண்மை

பிரதமர் மோடியிடம் பேசியது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை அதிகரிக்க வேண்டும்.

உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு, மனிதாபிமான உதவி ஆகியவற்றிற்கு இந்தியா ஆதரவளித்து வருவதற்கு பிரதமர் மோடியிடம் நன்றி தெரிவித்தேன்.

இந்திய மாணவர்கள் மீண்டும் உக்ரைன் வந்து படிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் விருப்பம் தெரிவித்தேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

புதுடில்லி: லோக்சபா தேர்தலுக்குப் பிறகு தங்கள் நாடுகளுக்குச் வருமாறு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகிய இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

மூலக்கதை