ரஜினி, கமல் யோசித்து முடிவெடுத்தால் நாட்டுக்கு நல்லது: கவுதமி

தினமலர்  தினமலர்
ரஜினி, கமல் யோசித்து முடிவெடுத்தால் நாட்டுக்கு நல்லது: கவுதமி

கமல் அரசியலுக்கு வருவாரா? ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது தான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி. இதுகுறித்து கவுதமி கூறும்போது "இருவரும் யோசித்து முடிவெடுத்தால் நாட்டுக்கு நல்லது" என்கிறார். இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நல்ல விஷயங்கள் இருக்கும் இடத்தில் கெட்ட விஷயங்களும் இருக்கும். தப்பு செய்கிறவர்களும், நல்லது செய்கிறவர்களும் ஒரே இடத்தில் தான் இருக்கிறார்கள். கமல் சொல்லி வரும் கருத்துக்கள் அவரது சொந்த கருத்து, அதில் யாரும் தலையிட முடியாது. கருத்து கூற அவருக்கு உரிமை உள்ளது. அவர் கருத்துக்கள் தவறு என்றும் சொல்ல மாட்டேன். யார் அரசியலில் ஈடுபட்டாலும் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. அரசியலுக்கு வருவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும், விருப்பங்கள் இருக்கும். யாரும் அரசியலுக்கு வரலாம்.

ஆனால் யார் வந்தாலும் அவர்கள் எந்த நோக்கத்தோடு வருகிறார்கள். என்ன கருத்தோடு வருகிறார்கள், என்ன பிரச்னைகளை முன்வைக்கிறார்கள், அதை எப்படி நிறைவேற்றுவார்கள் என்பதை நாட்டின் குடிமகள் என்ற முறையில் கவனிக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

ரஜினி, கமல் இருவருமே நன்கு யோசித்து முடிவெடுத்தால் மக்கள் முன்னேற்றமும், நாட்டின் நலனும் சிறப்பாக அமையும் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு கவுதமி கூறியுள்ளார்.

மூலக்கதை