அதிகாரப்பகிர்வுக்கு இணங்கினாலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை விட்டுக் கொடுக்க முடியாது! -நிமல் சிறிபால டி சில்வா

என் தமிழ்  என் தமிழ்
அதிகாரப்பகிர்வுக்கு இணங்கினாலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை விட்டுக் கொடுக்க முடியாது! நிமல் சிறிபால டி சில்வா

புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் கூடுதல் அதிகாரங்களை பகிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணங்கியுள்ள போதிலும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவியும் அவசியம் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று கூடிய அரசியலமைப்பு சபையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக செனட் சபை ஒன்றை ஏற்படுத்தி, அதில் அங்கம் வகிக்கும் இரண்டு உறுப்பினர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற யோசனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது. அதேபோல் அரசியலமைப்புச் சட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட வேண்டும். மேலும் அமைச்சுக்களுக்கான துறைகளில் மாற்றங்களை செய்ய முடியாத யோசனைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை