பக்ரைன் நாட்டில் களமிறங்கும் எஸ்.பி.ஐ., லைப் நிறுவனம்

தினமலர்  தினமலர்
பக்ரைன் நாட்டில் களமிறங்கும் எஸ்.பி.ஐ., லைப் நிறுவனம்

மும்பை : எஸ்.பி.ஐ., லைப், காப்­பீட்டு வணி­கத்­தில், பக்­ரைன் நாட்­டில் கால் ­ப­திக்க முடிவு செய்­துள்­ளது.
பாரத ஸ்டேட் வங்கி மற்­றும் பிரான்ஸ் நாட்­டில் நிதி சேவை­யில் ஈடு­பட்டு வரும், பி.என்.பி., பரி­பாஸ் கர்­டிப் ஆகி­ய­வற்­றின் கூட்டு நிறு­வ­னம், எஸ்.பி.ஐ., லைப். இந்­நி­று­வ­னம், ஆயுள் காப்­பீட்டு வணி­கத்­தில் ஈடு­பட்டு வரு­கிறது. உள்­நாட்டு ஆயுள் காப்­பீட்டு துறை சந்­தை­யில், எஸ்.பி.ஐ., லைப்­பின் பங்கு, 22 சத­வீ­தம் என்­ற­ள­வில் உள்­ளது. இந்­நி­லை­யில், இந்­நி­று­வ­னம், பக்­ரைன் நாட்­டில், காப்­பீட்டு வணி­கத்­தில் ஈடு­பட உள்­ளது.
இது­கு­றித்து, இந்­நி­று­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­னர் அர்­ஜித் பாது கூறி­ய­தா­வது:நிறு­வ­னம், விரி­வாக்க நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டு­வ­தற்­காக, பக்­ரைன் நாட்­டில், காப்­பீட்டு வணி­கத்­தில் கள­மி­றங்க உள்­ளது. இதற்­காக ஏற்­க­னவே, காப்­பீட்டு ஒழுங்­கு­முறை மேம்­பாட்டு ஆணை­யத்­தி­டம் ஒப்­பு­தல் பெறப்­பட்­டுள்­ளது. தற்­போது, அங்கு கிளை துவக்க, அந்­நாட்­டின் மத்­திய வங்­கி­யின் அனு­ம­திக்­காக காத்­தி­ருக்­கி­றோம். விரை­வில், அங்கு காப்­பீட்டு வணி­கத்­தில் ஈடு­ப­டு­வோம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
தற்­போது, இந்­தி­யாவைச் சேர்ந்த, பொதுத்­ துறை நிறு­வ­ன­மான எல்.ஐ.சி., மட்­டும் தான், பக்­ரைன், துபாய், கத்­தார், குவைத், ஓமன் ஆகிய நாடு­களில், காப்­பீட்டு வணி­கத்­தில் ஈடு­பட்டு வரு­கிறது.

மூலக்கதை