கோலிவுட்டில் தமன்னா கவனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோலிவுட்டில் தமன்னா கவனம்

கத்தி சண்டை படத்தில் விஷால் ஜோடியாக தமன்னா நடித்தார். அப்படத்தின் இயக்குனர் சிராஜ்,’ஹீரோயின்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள்.

அதற்கேற்ப கமர்ஷியல் படங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு தமன்னா கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தால் தமிழ் படங்களில் நடிப்பதற்கு தமன்னா யோசித்து வருவதாக தகவல் பரவியது. ஆனால் அவரது கவனம் தமிழ் படங்களை சுற்றியே வட்ட மிட்டுக்கொண்டிருக்கிறது.

சிம்பு, விக்ரம் படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் ஜோடியாக நடிக்க உள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா நடிப்பில் சிறுபட்ஜெட்டில் உருவாகி பெரிய வசூலை அள்ளிய ‘பெள்ளி சூப்புலு’ படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

இதன் உரிமையை பெற்றிருக்கும் கவுதம் மேனன் அதனை தமிழில் இயக்குகிறார்.

இப்படத்துக்கு ‘பெண் ஒன்று கண்டேன்’ என பெயரிட உள்ளதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.

.

மூலக்கதை