ஹீரோவை விமர்சனம் செய்த ராம்கோபால் வர்மா மீது தயாரிப்பாளர் தாக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹீரோவை விமர்சனம் செய்த ராம்கோபால் வர்மா மீது தயாரிப்பாளர் தாக்கு

அமிதாப், ரஜினி, சிரஞ்சீவி என டாப் ஹீரோக்களை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. சில சமயம் ஹீரோயின்களிடமும் வம்பு செய்கிறார்.

இதற்கு பல நட்சத்திரங்கள் பதிலடி கொடுக்கின்றனர்.   ரஜினி, சிரஞ்சீவி ரசிகர்கள் வர்மாவுக்கு ஒவ்வொரு முறையும் பதிலடி தருகின்றனர். ஆனாலும் விமர்சனம் செய்வதை நிறுத்தாமல் தொடர்கிறார் வர்மா.

டோலிவுட் நடிகர் பவன் கல்யாண் நடித்துள்ள ‘கட்டமராயுடு’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இதுகுறித்து வர்மா டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்தார்.
குடும்பத்தினர் உள்பட 3 முதல் 5 ரசிகர்கள் மட்டுமே கொண்டிருக்கும் பவனின் குடும்பம் தங்கள் பாக்கெட்டிலிருந்து ஒரு பைசா கூட எடுத்து செலவு செய்யாது.

ஆனால் மற்றவர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்துவர்.

உண்மையான அல்டிமேட் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.

திரை அரங்கு உரிமையாளர்கள் நஷ்டம் அடையும்போது அவர்களுக்கு பணத்தை திருப்பி தருகிறார். ஆனால் அதுபோல் பவன் செய்வதில்லை என வர்மா தாக்கி இருந்தார்.


பவன் மீதான விமர்சனத்தை கண்டு கோபம் அடைந்த அவர் நடித்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர் பந்தலா கணேஷ், வர்மாவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். ‘வர்மா ஒரு காலாவதியான மாத்திரை, பவன் அணியும் செருப்புக்கு கூட ஈடாக மாட்டார்.

தீவிரவாதி ஒருவனுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவரில்லை வர்மா.

யார் ஒருவராலும் பவனுக்கு தடங்கல் ஏற்படுத்த முடியாது’ என குறிப்பிட்டிருக்கிறார்.

.

மூலக்கதை