ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்; பிரதமரை சந்திக்கவும் திட்டம்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்; பிரதமரை சந்திக்கவும் திட்டம்

நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று (பிப்., 23) மாலை சந்திக்க உள்ளார்.

தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று (பிப்.,23) சந்திக்கிறார்.

மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இச்சந்திப்பின் போது, சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நடத்திய நம்பிக்கை ஓட்டெடுப்பை, செல்லாது என அறிவிக்க வேண்டும் என கனர்னர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து ஸ்டாலின் வலியுறுத்தினார். இதுதொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை