தனுஷ்கோடியில் 53 ஆண்டுகளுக்கு பிறகு அஞ்சல் நிலையம் திறப்பு

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
தனுஷ்கோடியில் 53 ஆண்டுகளுக்கு பிறகு அஞ்சல் நிலையம் திறப்பு

தனுஷ் கோடியில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஞ்சல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

ராம நாத புரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடந்த 1964-ம் ஆண்டும் டிசம்பர் 22-ல் தாக்கிய புயலால் அந்த இடமே தரைமட்டமானது. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

தனுஷ்கோடியை புயல் தாக்கி 53 ஆண்டுகள் ஆனநிலையிலும் பொதுமக்கள் வாழத் தகுதியற்ற இடம் என்று கூறி , மின்சாரம், மருத்துவம், குடிநீர் என எவ்விதமான அடிப்படை வசதிளும் இல்லாமல் அங்கு 300-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு புதியதாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து 53 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனுஷ்கோடியில் புதன்கிழமை அஞ்சல் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.ராமேசுவரம் கிழக்கு என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள அஞ்சல் நிலையம் தனுஷ்கோடி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கும்.

மூலக்கதை