முத்தம் தர மறுத்து ஹீரோயின் தகராறு

தமிழ் முரசு  தமிழ் முரசு
முத்தம் தர மறுத்து ஹீரோயின் தகராறு

சமீபகாலமாக லிப் டு லிப் முத்தக் காட்சிகள் தமிழ் படங்களில் சர்வசாதாரணமாகிவிட்டது. ஆனால் ஹீரோவுக்கு முத்தம் தர மறுத்து புதுமுக நாயகி தகராறு செய்தது பரபரப்பானது.

‘கேக்கிறான் மேய்க்கிறான்’ படப்பிடிப்பில் நடந்த இந்த சம்பவம் பற்றி இயக்குனர் எஸ். சாம் இமானுவேல் கூறியது: இணை பிரியாத நான்கு நண்பர்கள் மாடலிங் கம்பெனி நடத்துகிறார்கள். தொடர்ந்து கம்பெனியை நடத்துவதற்காக கதாநாயகி வீட்டில் கைவரிசை காட்டுகிறார்கள்.

ஹீரோ சபா மீது சந்தேகம் அடைகிறாள் நாயகி லூப்னா. இதனால் நட்பில் விரிசல் ஏற்படுகிறது.



இதன் முடிவு என்னவாகிறது என்பதை சொல்கிறது கதை. ஹீரோவுக்கு ஒரு காட்சியில் ஹீரோயின் முத்தம் தரவேண்டிய சீன் படமாக வேண்டி இருந்தது.

காட்சிக்கு எல்லாம் தயாராகிவிட்ட நிலையில் லூப்னாவிடம் நடிக்க கேட்டபோது முத்தம் தர மறுத்து தகராறு செய்தார். காட்சிக்கு முக்கிய தேவை என்று விளக்கியபோது, பார்க்கலாம் என்றபடி கேமரா முன் நின்றவர் திடீரென்று ஹீரோவுக்கு முத்தம் தந்து காட்சியை சர்ப்ரைஸாக்கினார்.

கார்த்திக் பாலா ஒளிப்பதிவு. ஆதித்யா மகாதேவன் இசை.

லயன் பிரின்ஸ் தயாரிப்பு.

சென்னை, நாகர்கோவில், கன்னியாகுமரி, மூணாறில் படப்பிடிப்பு நடந்தது.

.

மூலக்கதை