எதிரணியை பற்றி அதிகம் யோசிப்பதில்லை - ஷ்ரேயாஸ் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
எதிரணியை பற்றி அதிகம் யோசிப்பதில்லை  ஷ்ரேயாஸ் அதிரடி

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டிராவில் முடிந்த 3 நாள் பயிற்சி போட்டியில் இரட்டை சதம் விளாசிய (202 நாட் அவுட்) இந்திய ஏ அணி வீரர் ஷ்ரேயாஸ் அளித்த பேட்டியில், ‘ஒரு சமயம் தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் ேடல் ஸ்டெயினின் பந்து வீச்சை எதிர்கொண்டுள்ளேன். அவரது பந்துகளை எதிர்கொள்வது அப்போதுதான் எனக்கு முதல் முறை.

அவர் உச்சகட்ட பார்மில் இருந்தார். இதனால் ஒரு இளம் வீரராக எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

ஆனால் அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான 2 நாள் கொண்ட பயிற்சி போட்டியில் சதம் விளாசினேன்.

இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்போது நடந்த பயிற்சி போட்டியில் அதிக நம்பிக்கையுடன் களமிறங்கினேன். இரட்டை சதம் விளாசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.



தற்போது நான் ‘ரிலாக்ஸ்’ ஆக உணர்கிறேன். எதிரணியை பற்றி அதிகம் யோசிப்பதில்லை’ என்றார்.

பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஓ கீப் 101 ரன் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஆனால் 162 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றிய நாதன் லியானின் பந்து வீச்சே நன்றாக இருந்ததாக ஷ்ரேயாஸ் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ‘கிருஷ்ணப்பா கவுதம் என்னுடன் இணைந்து அதிரடியாக விளையாட தொடங்கியபோது, (கிருஷ்ணப்பா கவுதம் 68 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் உதவியுடன் 74 ரன்கள் எடுத்தார்) லியானுக்கு அது மகிழ்ச்சியை அளிக்கவில்லை. குறிப்பாக லியானின் பந்துகளை கிருஷ்ணப்பா கவுதம் அதிரடியாக அடித்து விளையாடியதால், லியான் ஏமாற்றமடைந்தார்.

இதனால் கவுதம் யார்? என லியான் என்னிடம் கேட்டார். அவர் ஒரு ஆப்-ஸ்பின்னர் என லியானிடம் கூறினேன்’ என்றார்.



.

மூலக்கதை