அனைத்து பொது துறை நிறு­வ­னங்­க­ளையும் பங்கு சந்­தையில் பட்­டி­ய­லிட திட்டம்

தினமலர்  தினமலர்
அனைத்து பொது துறை நிறு­வ­னங்­க­ளையும் பங்கு சந்­தையில் பட்­டி­ய­லிட திட்டம்

புது­டில்லி: மத்­திய அரசு, அனைத்து பொது துறை நிறு­வ­னங்­களும், ஒளி­வு­ம­றை­வற்ற செயல்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்டும் என்ற நோக்­கத்தில், அவற்றை, அடுத்த, 2 – 3 ஆண்­டு­களில், பங்குச் சந்­தையில் பட்­டி­ய­லிட திட்­ட­மிட்­டு உள்­ளது.
இது குறித்து, முத­லீடு மற்றும் பொதுச் சொத்து நிர்­வாக துறை இயக்­குனர், நீரஜ் குப்தா கூறி­ய­தா­வது: பொது துறையைச் சேர்ந்த, லாப­க­ர­மான நிறு­வ­னங்கள் அனைத்தும், பொது­மக்­க­ளுக்கு பங்­கு­களை வெளி­யிட்டு நிதி திரட்ட, அனு­மதி வழங்­கப்­படும். இதற்­காக, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யின் விதி­மு­றை­களை பின்­பற்றி, நிர்­வாகச் செயல்­பாடு­ களை ஒழுங்­கு­ப­டுத்­து­மாறு, பொதுத் துறை நிறு­வ­னங்கள் கேட்டுக் கொள்­ளப்­படும். குறிப்­பாக, கடந்த மூன்று ஆண்­டு­க­ளுக்­கான, தணிக்கை செய்­யப்­பட்ட நிதி நிலை விப­ரங்கள், விதி­மு­றைப்­படி, நிறு­வ­னங்­களின் இயக்­குனர் குழுக்­களை அமைத்தல்; விகி­தாச்­சா­ரப்­படி, தனி இயக்­கு­னர்­களை நிய­மித்தல் உள்­ளிட்ட பல்­வேறு நட­வ­டிக்­கை­களை, பொதுத் துறை நிறு­வ­னங்கள் மேற்­கொள்ள வேண்டும்.
இத்­த­கைய பணி­களை முடிக்க, ஓராண்டு அல்­லது இரு ஆண்­டு கள் ஆகும். அதி­க­பட்­ச­மாக, மூன்று ஆண்­டு­க­ளுக்குள், ‘செபி’ விதி­மு­றை­களை பின்­பற்றி, பங்கு வெளி­யீடு மேற்­கொள்­வ­தற்­கான தகு­தியை, பொதுத் துறை நிறு­வ­னங்கள் பெற்று விடும். பங்கு வெளி­யீட்டில் திரட்­டப்­படும் நிதி, பொதுத் துறை நிறு­வ­னங்­களின் வர்த்­தக விரி­வாக்­கத்­திற்கு பயன்­ப­டுத்திக் கொள்­ளப்­படும். அதனால், விரி­வாக்க நட­வ­டிக்­கை­க­ளுக்­காக, மத்­திய அர­சிடம் நிதி கோரு­வது தவிர்க்­கப்­படும். அனைத்து அரசு துறை­களும், அவற்றின் கீழ் உள்ள பொதுத் துறை நிறு­வ­னங்­களை, பங்கு வெளி­யீட்­டிற்கு தயார்­ப­டுத்தும்.
விற்­று­முதல், லாபம், நிகர சொத்து மதிப்பு உள்­ளிட்ட, பல்­வேறு அம்­சங்­களின் அடிப்­ப­டையில், பங்கு வெளி­யீட்­டிற்­கான, பொதுத் துறை நிறு­வ­னங்கள் தேர்வு செய்­யப்­படும்; இதற்­கான விதி­மு­றைகள், விரைவில் வெளி­யி­டப்­படும். விதி­மு­றை­களை பூர்த்தி செய்த, தகு­தி­யான பொதுத் துறை நிறு­வ­னங்கள், ஆறு மாதங்­களில், பங்கு வெளி­யீடு மேற்­கொள்­ளலாம். இந்த திட்டம், பொதுத் துறை நிறு­வ­னங்கள் வெளிப்­ப­டை­யாக செயல்­ப­டவும், ஒழுங்­கு ­மு­றை­யான நிர்­வாக நடை­மு­றை­க­ளுக்கும், சந்­தையில், ஆரோக்­கி­ய­மான போட்­டியை எதிர்­கொள்­ளவும் துணை புரியும். அனைத்­திற்கும் மேலாக, நிறு­வ­னங்­களின் செயல்­பா­டுகள் அனைத்தும், பங்கு முத­லீட்­டா­ளர்­களின் ஒப்­பு­த­லுடன் தான் நடை­பெற முடியும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இவ்­வாறு அவர் கூறினார்.
கடந்த, 2015 மார்ச் இறுதி நில­வ­ரப்­படி, பொதுத் துறை நிறு­வ­னங்­களின் எண்­ணிக்கை, 298 ஆக உள்­ளது. கடந்த, 2009 முதல், இது­வரை, பொதுத் துறையைச் சேர்ந்த, ஆறு நிறு­வ­னங்கள் மட்­டுமே, பங்­கு­களை வெளி­யிட்­டுள்­ளன. கடந்த, 2012ல், பொதுத் துறையைச் சேர்ந்த, நான்கு நிறு­வ­னங்கள் மட்­டுமே, பங்கு வெளி­யீட்­டிற்கு அனு­மதி பெற்­றன.

மூலக்கதை