ஆஸ்திரேலிய தொடரிலும் சிறப்பான ஆட்டம் தொடரும் - கேப்டன் விராட் கோஹ்லி நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலிய தொடரிலும் சிறப்பான ஆட்டம் தொடரும்  கேப்டன் விராட் கோஹ்லி நம்பிக்கை

ஐதராபாத்: இந்தியா -வங்கதேசம் இடையே ஐதராபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 208 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 204 ரன் விளாசிய விராட் கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் கோஹ்லி கூறியதாவது:  இந்த சீசனில் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் தான் மிகப்பெரியது. அதில் 4-0 என வெற்றிபெற்றோம்.

வங்கதேச அணி முதல் இன்னிங்சில் சிறப்பாக பேட்டிங் செய்தது. டாஸ் வென்றது எங்களுக்கு கூடுதல் பலம் சேர்த்தது.

நமது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். உலக தரம் வாய்ந்த 2 ஸ்பின்னர்களுடன் வேகப்பந்து வீச்சாளர்களும் பார்முக்கு திரும்பி இருப்பது ஆஸி.

தொடருக்கு வலுசேர்க்கும். இசாந்த் பழைய பந்திலும் ஸ்விங் செய்கிறார்.

உமேஷ் யாதவ் வேகத்தில் அச்சுறுத்தினார். பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த மைதானத்தில் வேகம் மற்றும் சுழற் பந்துவீச்சாளர்கள் கூட்டு முயற்சியில் திட்டமிட்டு விக்கெட்டை கைப்பற்றினர்.

ரசிகர்களுக்கு சிறந்த பொழுது போக்கை கொடுத்து வருகிறோம். ஆஸி. க்கு எதிராகவும் இது தொடரும், என்றார்.

வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் கூறுகையில், முதல் இன்னிங்சில்இந்தியாவை 600 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி இருந்தால் வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும்.

இந்தியாவின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. எங்களின் கடைநிலை வீரர்கள் பேட்டிங்கில் போராடியது மகிழ்ச்சி அளிக்கிறது.

தஸ்கின் அகமது  தொடக்கத்தில் விக்கெட் கைப்பற்றிநெருக்கடி  கொடுத்தார். இரு இன்னிங்சிலும் 100 ஓவருக்கு மேல் பேட்டிங் செய்துள்ளோம்.

தோல்வியில் இருந்து பாடம் கற்று இருக்கிறோம். அடுத்து வரும் இலங்கை தொடரில் ஆட்ட திறனை மேம்படுத்துவோம் என்றார்.



வங்கதேச டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு ஒரு புள்ளி கிடைத்துள்ளது. 121 புள்ளிகளுடன் இந்தியா டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

ஆஸி. 109 புள்ளிகளுடன் 2வது இடத்தில்  உள்ளது.
 கோஹ்லி  தலைமையில் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 19 டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடையாமல் சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் கவாஸ்கர் தலைமையில் 18 போட்டியில் தோல்வி அடையாமல் இருந்த சாதனை தகர்ந்துள்ளது.
 விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 6வது டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது. மேலும் அவரது தலைமையில் 23 டெஸ்ட்டில் 15 போட்டிகளில் வெற்றி கிடைத்துள்ளது.


 

.

மூலக்கதை