மோகன்லால் படத்திலிருந்து வெளியேறிய நிக்கி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மோகன்லால் படத்திலிருந்து வெளியேறிய நிக்கி

 இந்தியா, பாகிஸ்தான் போர் சம்பந்தமாக மம்மூட்டி, மோகன்லால் நடித்த படங்களை இயக்கிய மேஜர் ரவி அடுத்து ‘1971 பியாண்டு பார்டர்ஸ்’ படம் இயக்குகிறார். இதுவும் ராணுவ பின்னணியில் அமைந்த போர் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகிறது.

இதில் மோகன்லாலுடன் தமிழ், இந்தி, தெலுங்கு மொழி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

ராஜஸ்தான் ராணுவ பகுதிகளில் இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது ஜார்ஜியா நாட்டில் சில காட்சிகள் படமாக்க உள்ளனர். இதில் மோகன்லால் ஜோடியாக ஆஷா சரத் நடிக்கிறார்.

மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்கும் அல்லு சிரிஷ் ஜோடியாக நடிக்க நிக்கி கல்ராணி தேர்வு செய்யப்பட்டார். தற்போது நிக்கி படத்திலிருந்து விலகி இருக்கிறார்.
 
இதுபற்றி அவர் தரப்பில் கேட்டபோது, ‘தமிழில் மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா உள்பட 7 படங்களில் நடித்து வருகிறார்.

மேஜர் ரவி படத்தில் நடிக்க எண்ணியபோதும் கால்ஷீட் இல்லாத சூழல் ஏற்பட்டது. இதனால் அப்படத்தில் நடிக்கவில்லை’ என்றனர்.

இயக்குனர் ரவி கூறும்போது, ‘படத்தில் நிக்கி நடிக்காதது உண்மைதான்.

அவருக்கு பதிலாக வேறு நடிகை தேர்வு நடக்கிறது’ என்றார்.

.

மூலக்கதை