பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)

PARIS TAMIL  PARIS TAMIL
பிரான்சின் சனத்தொகை  புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)

பிரான்சின் சனத்தொகையானது மிகவும் உண்ணிப்பாகக் கணிக்கப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு, திருமணம், குடும்பம் என அனைத்தும் ஆராயப்பட்டு புதிய சனத்தொகையானது கணிப்பிடப்பட்டுள்ளதாக, புள்ளிவிபரவியல் மற்றும் பொருளாதாரக் கற்கைக்கான தேசிய நிறுவனமான Insee (Institut national de la statistique et des études économiques) தெரிவித்துள்ளது.
 
 
 
சனத்தொகை
 
2016 ஜனவரி முதலாம் திகதி, பிரான்சில் 66.9 மில்லியன் மக்கள் வசித்து வந்ததாகவும், இது 2015இன் சனத்தொகையை விட 265.000 பேரால் (+4%) அதிகமானது எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிராந்தியவாரியான மக்கள் தொகையின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 எப்படிக் கணிக்கப்பட்டது
 
ஒவ்வொரு மாநகரசபையும், அங்கு வசிக்கும் மக்களிடம், கட்டாயமாக ஒரு படிவத்தினை வழங்கி, நிரப்பித் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதன் அடிப்படையில், மிகவும் சிறு கிராமங்களின் அடிப்படையில் இருந்து,மிகவும் துல்லியமாகச் சனத்தொகையானது கணிக்கப்பட்டுள்ளது.
 
 
இறப்பு
 
2016ஆம் ஆண்டின் இறப்புத் தொகையானது 587.000 ஆக அமைந்துள்ளது. இது 2015ஆம் ஆண்டை விட 7.000 பேர் குறைவானதாகும். இதே நேரம் 2015இல் இறப்பு வீதமானது மிகவும் உச்சத்திற்குச் சென்று தடிமன் காய்ச்சல் (Grippe) தொற்றின் பின்னரான 18.300 பேரும் அதியுச்ச வெப்ப அலையினால் (canicule) 3.300 பேரும் சாவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
ஆயுள்
 
பெண்களின் சராசரி ஆயுட்காலம் 85,4 வருடங்களாகவும், ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 79,3 வருடங்களாகவும் இந்தக் கணிப்பீடு உறுதிப்படுத்தி உள்ளது.
 
திருமணம்
 
2016 ம் ஆண்டில், பிரான்சின் மாநகரசபைகள் 235.000 திருமணங்களை நடாத்தி வைத்துள்ளனர். 2015 இல் 8000 ஆக இருந்த ஓரினத் திருமணங்கள் சற்றுக் குறைவடைந்து, 2016 இல் 7000 ஓரினத் திருமணங்கள் நடாத்தப்பட்டுள்ளன.
 
 
 
1969 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மக்கள் தொகையானது முழுமையாக 2015 இலும் 2016 இலும் கணிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயெ மாகரசபைகள் மற்றும் மாவட்டங்கள், பிராந்தியங்களிற்கான பாதீட்டு ஒதுக்கீடுகள் கணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

 
 

மூலக்கதை