டோனியின் திடீர் முடிவு - காரணம் யார்?

PARIS TAMIL  PARIS TAMIL
டோனியின் திடீர் முடிவு  காரணம் யார்?

 இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் டோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

 
இவரது இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது இந்த முடிவுக்கு காரணம் என்ன என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
 
2014ல் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். யாரும் எதிர்பாராத நேரத்தில் அவர் இந்த ஓய்வை அறிவித்தார்.
 
தற்போதும் அதே போல் அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
 
டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய போது தலைவர் பதவியானது கோஹ்லிக்கு வழங்கப்பட்டது. தற்போது அவர் தலைமையிலான இந்திய அணி வெற்றிகளை குவித்து வருகிறது.
 
சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றியோடு சேர்த்து, தொடர்ந்து 18 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே சந்திக்காத அணி என்ற பெருமையை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்தார் கோஹ்லி.
 
கோஹ்லிக்கு தலைவர் பதவி சென்றதுமே டோனிக்கான தேவை இந்திய அணியில் குறைந்த விட்டது. இந்த யதார்த்த நிலை தான் டோனியின் இம்முடிவுக்கு காரணம் என்று கூறுகின்றனர்.
 
துடுப்பாட்டத்தில் சொதப்ப ஆரம்பித்த டோனி இனி கேப்டன்ஷிப் பெயரை மட்டுமே சொல்லி அணியில் நீடிக்க முடியாது என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
 
இதனால் அவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கிரிக்கெடில் இருந்து ஓய்வு பெறலாம். தலைவர் பதவியை துறந்த டோனி, இங்கிலாந்து தொடரில் விளையாட முடிவு செய்துள்ளார்.
 
இவரது இந்த முடிவு ரசிகர்களுக்கு ஓரளவு நிம்மதியை கொடுத்தாலும், இந்த தொடரோடு அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் அவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
இதுதவிர, பிசிசிஐ தலைவராக கங்குலி வருவதாக வெளியான தகவல்களும் டோனி இந்த முடிவை எடுக்க காரணம் என்று கூறுகின்றனர்.
 
எப்போதும் டோனிக்கும், கங்குலிக்கும் ஆகாது என்று ஒரு கருத்து நிலவி வருகிறது. கங்குலி எப்போதுமே கோஹ்லி ஆதரவாளர் என்றே கூறுவர்.
 
இந்த நிலையில் ஏற்கனவே கோஹ்லி கோஷ்டியை சமாளிக்க வேண்டிய நிலையில் இருந்த டோனி, கங்குலியிடமும் சிக்கி அவமானப்பட வேண்டாம் என இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

மூலக்கதை