shruti haasan to say thanks for vedhalam team

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
shruti haasan to say thanks for vedhalam team

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் தற்போது வேதாளம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்துள்ளார்கள். மேலும் சூரி, கபீர் சிங், அஸ்வின், வித்யூலேகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். சென்னையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, தொடர்ந்து கொல்கத்தா, இத்தாலி உள்ளிட்ட பல இடங்களில் நடந்தது. தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படக்குழுவினருக்கு ஸ்ருதிஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். வேதாளம் படக்குழுவினருடன் பணிபுரிந்தது மிகவும் ஜாலியாகவும் நல்ல அனுபவமாகவும் இருந்ததாக கூறிய அவர், குறிப்பாக தனது சூப்பரான இயக்குனர் சிவாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

மூலக்கதை