ஆபாசபுயல் சன்னி லியோனை விரட்டிய படக்குழு
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.
இந்நிலையில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தில் ஒரு ஐட்டம் நடனம் ஆட சன்னிலியோனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த படத்தில் நடனம் ஆட சன்னிலியோன் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை படக்குழுவினர் தர ஒப்புக்கொண்டதாலும், இந்த பாடலின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மும்பையில் இருந்து சென்னை வரும் தனது டீமுக்கான விமான செலவு உள்பட மற்ற செலவுகளையும் தயாரிப்பாளர் ஏற்கவேண்டும் என்ற நிபந்தனையை சன்னிலியோன் விதித்துள்ளார்.
இதற்கு தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளாததால் சன்னிலியோன் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
சன்னிலியோன் டீமில் சுமார் 10 பேர் வரை இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.