ஒரே மாதத்தில் ரூ.950 கோடி தேர்தல் நிதி திரட்டிய ஹிலாரி!

தினமணி  தினமணி
ஒரே மாதத்தில் ரூ.950 கோடி தேர்தல் நிதி திரட்டிய ஹிலாரி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் ஆகஸ்ட் மாதம் 143 மில்லியன் டாலர் (சுமார் ரூ.950 கோடி) தேர்தல் நிதி திரட்டினார்.

இது தொடர்பாக ஜனநாயகக் கட்சி அதிபர் தேர்தல் பிரசாரக் குழு மூத்த அதிகாரி ராபி மூக் தெரிவித்ததாவது: ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் நிதிக்காக 23 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் நிதி அளித்துள்ளனர். சராசரியாக ஒவ்வொரு ஆதரவாளரும் 50 டாலர் தேர்தல் நிதி அளித்துள்ளார். இந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தமாக 143 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 950 கோடி) தேர்தல் நிதி திரட்டப்பட்டது. ஹிலாரியை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கச் செய்ய ஜனநாயகக் கட்சியின் அனைத்துத் தொண்டர்களும் மிகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் கடுமையான போட்டியை சமாளிக்கும் விதத்தில் தேர்தல் வியூகங்களை வகுக்க வேண்டும். தேர்தலில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளர்களை சந்திப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களை வாக்குச் சாவடிகளுக்கு வரச் செய்து வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. ஹிலாரியின் வெற்றியை உறுதி செய்ய பல்வேறு பிரசார உத்திகளை மேற்கொள்வோம். இதற்காகப் பெரும் நிதி தேவைப்படுகிறது என்று தேர்தல் பிரசாரக் குழு மூத்த அதிகாரி ராபி மூக் தெரிவித்தார்.

மூலக்கதை