இலங்கைத் தமிழரின் தோசையை சாப்பிட வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள் (Video)

TAMIL CNN  TAMIL CNN
இலங்கைத் தமிழரின் தோசையை சாப்பிட வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள் (Video)

அமெரிக்காவில் தோசை மனிதன் என்று செல்லமாக அழைக்கப்படும் திருக்குமார் உலகப் புகழ் பெற்ற நியூயோர்க் தோசை எனும் பெயரில் தனது சிறிய இழுவை வண்டியில் தோசை வியாபாரத்தை ஆரம்பித்தார்.

வாஷிங்டன் தென்மேற்கு பகுதியில் ஸ்கொயர் என்ற சிறுவர் பூங்காவிற்கு அருகாமையில் 2001ம் ஆண்டு வியாபாரத்தை ஆரம்பித்தார்.

இவர், பரிமாறும் காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு அடைத்த முறுமுறுப்பான சமோசா மற்றும் தோசையை உண்பதற்காக ஒரு நீண்ட வரிசையில் அமெரிக்கர்கள் காத்திருகின்றார்கள்.

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த திருக்குமார் 1995ம் ஆண்டு மற்றைய புலம்பெயர்ந்தவர்கள் போன்றே கிறீன் கார்ட் லொட்டரி (green card lottery) மூலமாக தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் குடியேறினார்.

ஆரம்பத்தில் தனது மனைவி பிள்ளைக்காக கட்டுமான வேலை, ஒரு எரிவாயு நிலையம் மற்றும் தனது நண்பரின் உணவகம் என கிடைத்த வேலைகளை செய்து சொந்தமாக தொழில் செய்ய வழி தேடினார்.

தான் நினைத்தபடி தொழில் தொடங்க அமெரிக்க சட்டப்படி 27,000 டொலர்களை செலுத்த 31/2 வருடங்கள் கடுமையாக உழைத்து, சேமித்த பணத்தை கொண்டு நியூயோர்க் தோசை எனும் வீதியோர உணவகத்தை ஆரம்பித்தார்.

இன்று, உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில், அவரது மலிவான மற்றும் ருசியான உணவிற்காக உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தருகின்றனர்.

கலிபோர்னியா மற்றும் ஜப்பானில் ரசிகர் சங்கமும் உள்ளது. 2002 ஆம் ஆண்டு நியூயோர்க் பத்திரிகை மூலம் இவருடைய உணவகம் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டன.

அதனை தொடர்ந்து உலகம் முழுவதும் நியூயோர்க் தோசை பற்றி செய்தித்தாள்கள் மற்றும் இணையங்களில் வெளிவந்தன.

மிகப் பிரபலமான நடைபாதைகள் சமையல்காரர்களுக்கும் மற்றும் தெரு விற்பனையாளர் Vendy விருது 2007ல் திருக்குமாருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உழைப்பால் உயர்ந்த யாழ்ப்பாணத் தமிழரை வாழ்த்துவோமே….

மூலக்கதை