போதை மருந்து பயன்பாட்டை வரைமுறைப் படுத்த கோரிக்கை

COOL SWISS  COOL SWISS
போதை மருந்து பயன்பாட்டை வரைமுறைப் படுத்த கோரிக்கை

இளம் வயதினரிடையே போதை மருந்து பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரங்களில் அதை வரைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜெனீவ, பஸெல் மற்றும் பெர்ன் ஆகிய மாகாணங்களில் போதைமருந்து பயன்பாடு வரைமுறைப்படுத்தப்பட்டு சட்டபூர்வமாக வினியோகம் நடைபெற்று வருகிறது.

இந்த வரிசையில் தற்போது சூரிச் நகரமும் போதைமருந்து பயன்பாட்டை வரைமுறைப்படுத்தி அதை சட்டபூர்வமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சுவிஸ் நாட்டின் முக்கிய நகரங்கள் ஒன்றிணைந்து பொது சுகாதார கூட்டமைப்பு அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெர்ன் நகரத்தை பொறுத்தமட்டில் 18 வயது நிரம்பிய, தொடர்ந்து போதைமருந்து பயன்படுத்தி வரும் ஒவ்வொருவரும் மாதம் 15 கிராம் வரையில் நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும்.

ஜெனிவா நகரத்தில் போதை மருந்து பயன்பாட்டிற்கென சிறப்பு விடுதிகளை அரசு விதிமுறைகளுடன் துவங்கப்பட்டுள்ளது.

பஸெல் நகரத்தில் போதைமருந்தை வலி நிவாரணியாக பயன்படுத்துவோருக்கு சட்ட சிக்கல்களில் இருந்து விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் சுமார் 5 லட்சம் பொதுமக்கள் போதை மருந்தை சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்தி வருகின்றனர்.

சட்டத்தை மீறி போதை மருந்தை பயன்படுத்தும் இளம் வயதினருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் CHF 100 அபராதமாக விதிக்க முடிவு செய்தனர்.

மூலக்கதை