டெல்லியில் நடைப்பெற்ற 67வது குடியரசு தின விழா: சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
டெல்லியில் நடைப்பெற்ற 67வது குடியரசு தின விழா: சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர்

நாட்டின் 67வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். டெல்லி ராஜ்பாத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு வந்த குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் பிரணாப் முகர்ஜி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

ராஜ்பாத்தில் நடைபெற்ற முப்படை அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியோரின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. மேலும் இந்தியாவின் வல்லமையை பறைசாற்றும் ஆயுதங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது. 26 ஆண்டுகளுக்கு பிறகு மோப்ப நாய்களின் அணிவகுப்பும் இன்று நடைபெற்றது. பிரான்ஸ் அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதால் அந்நாட்டு ராணுவத்தினரின் அணிவகுப்பும் நடைபெற்றது. 

முன்னாதாக டெல்லி அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி, போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், முப்படை தளபதிகள்  ஆகியோரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

விழாவில் துணை குடியரசுத் தலைவர் அமித் அன்சாரி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்ககேற்றனர். குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுபாப்பு போடப்பட்டிருந்தது.

மூலக்கதை