பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
கராச்சி, பாகிஸ்தானுக்கு எப்-16 போர் விமானங்களை விற்பது உள்பட ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதனை பாகிஸ்தான் நாட்டில் இருந்து வெளிவரும் டான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கின்றது. பயங்கரவாத ஒழிப்பு முயற்சிகள் மற்றும் வருங்கால நடவடிக்கைகளுக்கு தயாராவது ஆகிய அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கு இந்த ஒப்பந்தம் அனுமதி அளிக்கும் என இதுதொடர்பாக, அமெரிக்க காங்கிரசுக்கு ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு கழகம் வெளியிட்ட கடிதம் தெரிவிக்கின்றது. இதன்படி மேம்படுத்தப்பட்ட விமான மின்னணுவியல், பயிற்சி மற்றும் முழு அளவிலான தளவாட விநியோகம் உள்ளிட்டவை பாகிஸ்தானுக்கு கிடைக்கும். இதுதவிர, இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளின் விமான படைகளும் தடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் இரு நாடுகளும் இணைந்து போர் எதிர்ப்பு நடவடிக்கைகள், பயிற்சிகள் உள்ளிட்டவற்றை இணைந்து மேற்கொள்ள வழிவகுக்கும். பாகிஸ்தானுக்கு பொறியியல், தொழில் நுட்பம் மற்றும் தளவாடங்கள் உதவி ஆகியவையும் அமெரிக்கா மற்றும் அதன் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கிடைக்க பெறும். இந்தியாவுக்கு ரூ.840.25 கோடி மதிப்பிலான ஆயுத விற்பனை செய்வதற்கு அமெரிக்கா சில வாரங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்து இருந்தது. உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தவும் மற்றும் மண்டல அளவிலான அச்சுறுத்தல்களை தடுக்கவும் உதவியாக இந்த ஒப்பந்தம் அமையும். இந்த சூழலில், பாகிஸ்தானுடன் அமெரிக்கா ஆயுத ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக, உள்நாட்டு குழப்பங்கள், வன்முறை, மழை, வெள்ள பாதிப்பு போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீள்வதற்கு வேறு சில நாடுகள், சர்வதேச நாணய நிதியகம் உள்ளிட்ட அமைப்புகளிடம் கடன் பெறும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருந்தது. எனினும், அந்நாட்டுக்கு அளிக்கப்படும் நிதி பயங்கரவாத செயல்களுக்கே பயன்படுத்தப்படும் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
