​பெருவில் 1,000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டியெடுத்து ஆய்வு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​பெருவில் 1,000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டியெடுத்து ஆய்வு

1,000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட 6 இளம் பெண்களின் உடல்களை பெரு அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தோண்டியெடுத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள லம்பாயக் என்ற பகுதி, வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க பகுதியாக கருதப்படுகிறது. இங்குள்ள முக்கிய வழிபாட்டுத் தலம் அருகே அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நிபுணர்கள் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளைக் கண்டறிந்துள்ளனர். 

இந்த எலும்புகள் கடவுளுக்குத் தியாகம் செய்யப்பட்ட இளம் பெண்களின் எலும்புகளாகத்தான் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 

மூலக்கதை